செய்திகள்

மோடியின் பயணம் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை மீண்டு எழும்! – ரணில் விக்ரமசிங்கே உறுதி!!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 – ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் தினத்தன்று நடந்த முஸ்லிம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அங்கு சென்ற முதல் உலக தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான். மோடியின் பயணம், இலங்கைக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து அந்த நாடு மீண்டு வருவதற்கு மோடியின் பயணம் பெருதும் துணை புரியும். அதோடு அந்நாட்டு சுற்றுலாத் துறையும் மீண்டும் எழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அவர் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசினார். இலங்கை மீண்டும் எழுச்சி பெறும், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் துணிவை தோற்கடித்துவிட முடியாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுன் நடந்த சந்திப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:-

தாமதமாக நடைபெற்று வந்த இந்தியா – இலங்கை இணைந்து செயல்படுத்திவரும் திட்டங்களை விரைவாக முடிப்பதாக பிரதமர் மோடிக்கு உறுதி கொடுத்துள்ளேன். இந்தியா, இலங்கை இணைந்து மேலும் பல கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதன் மூலம் இருநாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும்.

இலங்கைக்கு மோடி தொடர்ந்து ஆதரவு அளித்துவருவது இலங்கையின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும், இன்னும் அதிக மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம்.

இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான பயிற்சியை இந்தியா அளிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

மோடியின் இலங்கை பயணம் மூலம் இலங்கைக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளும் என்றும், அதன்மூலம் இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் குண்டுவெடிப்பு நடைபெற்றதை தொடர்ந்து பல நாடுகள் தங்கள் மக்கள் இலங்கைக்கு பயணம் செய்ய கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close