செய்திகள்

ஊழல் அதிகாரிகள் 12 பேரை வீட்டுக்கு அனுப்பியது மோடி அரசு! களை எடுப்பு தொடர்வதால் அதிகாரிகள் கலக்கம்!!

மோடி அரசு 2 – வது முறையாக பதவியேற்ற சில நாட்களில் அதிரடி நடவடிக்கையாக ஊழல் மற்றும் செக்ஸ் புகார் இருக்கும் அதிகாரிகள் உடனடியாக பணியில் இருந்து விலகி கொள்ளுமாறு மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. இது போன்ற அதிரடி நடவடிக்கையால் ஊழல் மற்றும் முறைகேடு அதிகாரிகள் மத்தியில் ‘கிலி’ ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு நாட்டில் ஊழல், லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு ஏதும் சொல்ல முடியாததால் எதிர்கட்சிகள் வாய் மூடி மவுனித்தன. தற்போது மோடி அரசு 2 – வது முறை பொறுப்பேற்றதும் ஊழல் அதிகாரிகள் மீது பார்வையை திருப்பி உள்ளது.

இதன் முதல் கட்டமாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேர் பெயர் பட்டியலிடப்பபட்டுள்ளது. இதில் ஊழல் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரையும் கட்டாய ஓய்வில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

வீட்டுக்கு அனுப்படும் அதிகாரிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் முன்னாள் அமலாக்க துறை இணை இயக்குனரும், தற்போதைய வருமான வரித்துறை இணை கமிஷனருமான அசோக்அகர்வால். இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தவர். மேலும் சில தரகர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர். இவர் மீது சிபிஐயும் வழக்கு பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக எஸ்கே ஸ்ரீவத்சவா. இவர் நொய்டாவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கமிஷனராக உள்ளார். இவர் மீது செக்ஸ் புகார் உள்ளது.

மூன்றாவதாக ஹோமி ராஜ்வன்ஸ். வருமான வரித்துறை அதிகாரி. இவர் மீது ஊழல் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.

இதுபோல் மொத்தம் 12 அதிகாரிகள் கட்டாய ஓய்வில் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும் என கூறப்படுகிறது.

இது போல் காஷ்மீரில் போதை பொருள் கடத்தும் கும்பலுக்கு துணை போனதாக 2 சிறப்பு போலீஸ் படை அதிகாரிகளை அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை அனைத்து துறைகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் உள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதே நேரம், நேர்மையான அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close