ஆன்மிகம்செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை! பக்தர்கள் வரவேற்பு!!

சென்னை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். திங்கள், புதன், வியாழன் போன்ற நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

கோவிலுக்கு வரும் சிலர் வளாகத்தில் நின்று செல்போனில் ‘செல்பி’ புகைப்படங்கள் எடுக்கின்றனர். சிலர் சன்னதி அருகிலேயே செல்போனில் பேசுகின்றனர். இது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

எனவே கோவிலில் அமைதியை கடைபிடிக்கவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், செல்போன் பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளத்தற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாநிலத்திலேயே முதல் நடவடிக்கையாக அங்குதான் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது வடபழனி கோவிலிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலிலும் செல்போனுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close