இந்தியா

இந்திய இராணுவத்தின் அதிரடியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரை பதற்றத்தில்.. பாக். வீரர்களுக்கு இம்ரான் கான் போட்ட தடை.!

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுக்கும் போது அதை வித்தியாசமாக கொண்டாட பாகிஸ்தான் வீரர்கள் முடிவெடுத்து இருந்தனர். இதற்கு இம்ரான் கான் அனுமதி மறுத்தது மட்டுமில்லாமல் அறிவுரையும் கூறி உள்ளார்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மார்ச் மாதம் ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவத்திருந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுசை அணிந்து விளையாடினார். இது தற்போது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் இந்த செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி முடிவெடுத்தது. உலகக் கோப்பை தொடரில் வரும் 20 ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விக்கெட்களை வீழ்த்தும் போது அதை வித்தியாசமான முறையில் கொண்டாட பாகிஸ்தான் வீரர்கள் முடிவெடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத கேலி, கிண்டல்கள் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close