செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: அபிநந்தனைச் சீண்டிய பாகிஸ்தான் டிவி! கொந்தளிப்பில் இந்தியர்கள்!!

தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வெற்றி கண்டு இந்தியா போட்டியை முன்னேற்றப் பாதையில் துவங்கியுள்ளது.

இந்தியா தனது நான்காவது போட்டியில் பாகிஸ்தானை வருகின்ற 16 – ஆம் தேதி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் சந்திக்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளமபரத்தை வெளியிட்டுள்ளது.  

பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா விமானப் படையானது பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத்  தாக்குதல் நடத்தியது.  இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தன.

இதில் ஈடுபட்ட அந்நாட்டு விமானங்களை துரத்தி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய போர் விமானம் ஒன்றானது பாகிஸ்தான் நாட்டு எல்லையில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்தது. அதை இயக்கிய விமானி விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் மோடி அரசின் அடுத்தக்கட்ட அழுத்தமான நடவடிக்கைகளால், எந்தவித நிபந்தனையும் இன்றி அவரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவர் நன்றாக நடத்தப்பட்டதாக காட்டிக்கொள்வதற்காக விடியோ ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அதில் அபிநந்தன் கையில் டீ கப்புடன் பேசிக்கொண்டிருப்பார்.

உலகக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் ஜாஸ் டிவி ஒளிபரப்பி வருகிறது. இதற்காக முன்னோட்டமாக அந்த டிவி விளமபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு நபர் விமானி அபிநந்தனைப் போலவே ‘ஹேண்டில்பார் வடிவ’ மீசையுடன சித்தரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கருப்பு நிறத்தில் இருப்பவர் போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் உடை நிறமான நீல நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. கையில் டீ கப்புடன் இருக்கும் அவரிடம், இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் அபிநந்தனின் புகழ்பெற்ற பதிலான “I’m sorry, I am not supposed to tell you this.” என்பதையே பதிலாக அழைக்கிறார்.

இறுதியில் அவரை போகச் சொல்லும் போது, அவர்கள் கிண்டல் செய்வதுடன் விளம்பரம் முடிவடைகிறது.   

விங் மாஸ்டர் அபி நந்தனை கேலி செய்யும் வகையில் வெள்யிடப்பட்டுள்ள இந்த விளம்பரம், இந்தியர்களை கொதிப்படையச் செய்துள்ளது. கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close