செய்திகள்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி உறுதி! டெல்லியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை!!

இலங்கை சென்றிருந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபட்சே ஆகியோரை சந்திர்த்திருத்து பேசினார். 

இதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தமிழர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக விரிவாக பேசுவதற்கு டெல்லி வரவிரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசிய கூட்டமைபுடனான சந்திப்புகளை டெல்லியில்  நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.  

http://www.virakesari.lk/article/57883

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close