செய்திகள்

அடிபணிந்தது பாகிஸ்தான்! ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை ரகசியமாக மூடியது!!

தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. இங்கு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத முகாம்கள் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மட்டும் 11 தீவிரவாத முகாம்கள் இயங்கின. இங்குள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி பகுதியில் தலா 5 பயங்கரவாத முகாம்களும், பர்னாலா பகுதியில் ஒரு முகாமும் செயல்பட்டு வந்தன.

தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் அனுப்பி வைத்து நாச வேலைகளில் ஈடுபடச் செய்வதுதான் பாகிஸ்தானின் கடமையாக இருந்து வந்தது. ஏராளமான முறை இந்தியா எச்சரித்தும் பாகிஸ்தான் கண்டுகொண்டதே இல்லை. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்ததும், பாகிஸ்தான் நடுங்க ஆரம்பித்தது. முதலில் வெளியுலகிற்கு மறுத்தாலும் பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது. 

இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனதும், பாகிஸ்தான் மிரள ஆரம்பித்துவிட்டது. ஏனெனில் மோடியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மோடி பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அழைக்காமல் ஒதுக்கினார். இருந்தாலும் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று தொடர்ந்து கெஞ்சுகிறது. ஆனால் மோடி செவிசாய்ப்பதாக இல்லை.

இதற்கிடையே சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தேவையான நவீன குண்டுகளை இஸ்ரேலிடம் இருந்த வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டது. இதோடு நிற்காமல், கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கேக்கில் வருகிற 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்பை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அதேநேரம் சீனா உள்பட மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றுள்ளார். அவர் தனது வேலையை காஷ்மீரில் இருந்து தொடங்குகிறார். அங்குள்ள தீவிரவாதிகளை களையெடுப்பது, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது பொன்றவைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மண்டியிட தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை ரகசியமாக மூடிவருகின்றன. 

கோட்லி, நிகியல் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்கள், பாலா மற்றும் பாக் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள், கோட்லி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் ஒரு முகாம் ஆகியன மூடப்பட்டுள்ளன. முசாபராபாத் மற்றும் மிர்பூருக்கு அருகில் உள்ள முகாம்களும் மூடப்பட்டுள்ளன. 

இந்த தகவல்களை இந்திய உளவுத்துறை உறுதிபடுத்தி உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close