2019 தேர்தல்செய்திகள்

போலி புள்ளிவிபர நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாந்து போன ராகுல் காந்தி !! செம டோஸ் விட்ட அக்கா பிரியங்கா !!

தேர்தலுக்கு முன், ‘கேம்பிரிட்ஜ்அனலிடிகா’ என்ற, ஒரு நிறுவனத்தின் உதவியை நாடியது காங்கிரஸ். புள்ளி விபரங்களை வைத்து, எப்படி தேர்தல் பிரசாரம் செய்யவேண்டும் என, இந்த நிறுவனம் காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும்.

 இந்த நிறுவனம், பல ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தி, புள்ளி விபரங்களை அலசியது. இதற்காக கோடிக்கணக்கில், கட்சி சார்பில் செலவிடப்பட்டது. அந்த நிறுவனத்திற்காக செயல்பட்டவர், பிரவீன் சக்ரவர்த்தி என்பவர். ‘பா.ஜ.க வுக்கு, 140 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது’ என, பிரியங்கா மற்றும் ராகுலிடம் சொல்லி வந்தார். இராகுல் காந்தியும் இவர்கள் அளித்த பொய்யான விபரங்களால் கனவு லோகத்தில் மிதந்தார். அவ்வப்போது அவர்கள் கேட்ட பணம் தரப்பட்டு, தேர்தலுக்கு முன்பே கணக்கு முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், அவர், தலைமறைவாகி விட்டார். அவருடைய அலுவலர்களும் எங்கு போனார்களோ தெரியவில்லை. காங்கிரசார், இவர்களை தேடி வருகின்றனர்.

‘இந்த நிறுவனத்திற்காக பணம் செலவழித்தது வீண்’ என்கிறார், பிரியங்கா. எதையும் அலசிப் பார்க்காமல் பணத்தை முழுவதையும் முன்கூட்டியே அள்ளிக் கொடுத்தது ஏன் … இப்படித்தான் ஏமாறுவதா என அண்ணன் ராகுலை டோஸ் விட்டுள்ளார். இப்படி தேவையற்ற செலவுகளை தவிர்க்க, பிரியங்காவிடமே பண விவகாரங்களை ஒப்படைத்து விட்டாராம் ராகுல் காந்தி.

Tags
Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close