செய்திகள்

ஹிந்துக்களாக பிறந்தது பாவமா? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரமாரி கேள்வி!!

ஹிந்து சாமியார்கள் கொல்லப்படுவதற்கும், ஹிந்துக்கள் கொலை செய்யப்படுவதற்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: –

“எத்தனை ஹிந்துக்களை வெட்டி கொல்கிறார்கள்? இது பற்றி யாராவது குரல் கொடுக்கிறீர்களா? சாமியார்களை வெட்டி கொல்கிறார்கள்? சாமியார்கள் என்ன செய்தார்கள்? கோயம்புத்தூரில் எத்தனை கொலைகள் நடந்து இருக்கிறது? மதுரையில் எத்தனை கொலைகள் நடந்து இருக்கிறது?

ஹிந்துக்களாக பிறந்தது பாவமா? ஹிந்துஸ்தான் தேசத்தில் ஹிந்துவாக ஒருவன் பிறந்தது பாவமா? அவளைப்போய் வெட்டிக் கொல்கிறார்கள். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்!’ என்று கோஷம் போட்டு தான் சுதந்திரமே கிடைத்தது. ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்!’ என்று கோஷம் போடவில்லையா? ‘பாரத் மாதா கி ஜெய்!’ என்று கோஷம் போடவில்லையா?

இதையெல்லாம் மறக்கக் கூடாது. உண்மையை எதற்காக மறக்க வேண்டும்? இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழும் ஹிந்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்துகின்ற கட்சிகள், பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டுமா? வேண்டாமா? அதை மட்டும் தாராளமாக மறந்துவிடுகிறார்கள்.

ஹிந்துக் கடவுள்களை விமர்சனம் செய்கிறார்கள். ஹிந்து கோயில்கள் முன்பாக அதிலும் குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பாக “இங்கு கடவுள் இல்லை” என்று போர்டு வைத்திருக்கிறார்கள். இதே போர்டை மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் முன் வைக்க முடியுமா?

ஒட்டுமொத்தமாக மத்திய அரசை எதிர்க்க முடியாது. ஏன் எதிர்க்க வேண்டும்? நரேந்திர மோடி இந்தியாவின் பகையாளியா? அவர் பாகிஸ்தான்காரரா? இந்திய நாட்டில் பிறந்த ஒரு அசல் வித்து அவர். இந்திய நாட்டின் மீது அக்கறை கொண்ட மனிதர். தாய் மீது பாசம் கொண்ட மனிதர். அவரை ஏன் நாங்கள் வெறுக்க வேண்டும்?”

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இந்த எதார்த்த உண்மை பேச்சு தான் தற்போது இணையத்தின் வைரல்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close