செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் : தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9% அதிக தேர்ச்சி!

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர்.

முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம் ஆகும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close