ஊடக பொய்கள்சமூக ஊடகம்
Trending

#KathirNewsImpact முன்னரே கதிர் செய்திகள் தோலுரித்து காட்டிய போலி செய்தி : தற்போது ட்வீட் செய்து பிறகு நீக்கிய மு.க ஸ்டாலின்

செம்மொழியில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி விருதுகளை அரசு வழங்குவது வழக்கம். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. விளம்பரத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லை என்றும். அந்த விளம்பரத்தில் மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிக்கிறது என்றும் ஒன் இந்தியா செய்தி நிறுவனம் போலி செய்தியை வெளியிட்டது.

அந்த போலி செய்தியை தோலுரித்து காட்டியது கதிர் செய்திகள். அந்த செய்தியை கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து படிக்கலாம்.

செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று வதந்தியை கிளப்பும் ஒன் இந்தியா ! செய்திகளை திரித்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமா ?

இப்போது, மீண்டும் இந்த போலி தகவலை ட்விட்டரில் பதிவிட்டு, சுட்டிக்காட்டப்பட்டவுடன் நீக்கியுள்ளார் தி.மு.க தலைவர் திரு மு.க ஸ்டாலின். அதன் ஸ்க்ரீன் ஷாட் கீழே.

இந்த தகவல் போலியானது என்று முன்பே கதிர் செய்திகள் வெளியிட்டதை சிலர் ட்விட்டரில் சுட்டி காட்டியவுடன் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இதை நீக்கியுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close