செய்திகள்

கனிமொழிக்காக மீண்டும் திறக்கப்படும் திகார் ஜெயில் கதவு! வழக்கை விரைந்து முடிக்க சிபிஐ கோரிக்கை! டெல்லி ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு நோட்டீஸ் அனுப்பியது!

2ஜி வழக்கில் ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த கனிமொழி, ஆ.ராசா, கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் உள்பட 17 பேரை அமலாக்கப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 – ஆம் ஆண்டு டிசம்பர் 21 – ஆம் தேதி விடுவித்தது. அதேபோல சிபிஐ தொடர்ந்திருந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கிலும், ஆ.ராசா, கனிமொழி உள்பட 15 பேருக்கு எதிராக ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை என்றும் ஆதாரங்களை எடுத்து வைக்க சிபிஐ தவறிவிட்டது என்றும் கூறி விடுவித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.  சிபிஐ தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

சிபிஐ தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு அக்டோபர் 24 – ஆம் தேதியில் இருந்து விசாரணை தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஜூலை 30 – ஆம் தேதியே விசாரணயை தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நீதிபதி ஏ.கே. சாவ்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ரிபு தமன் பரத்வாஜ், “இந்த வழக்கு சர்வதேச அளவில் சம்பந்தப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அக்டோபரில் தொடங்கும் விசாரணையை முன்கூட்டியே தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.கே. சாவ்லா, அக்டோபர் மாதம் தொடங்க இருந்த மேல்முறையீட்டு விசாரணையை ஜுலை 30 -ஆம் தேதி தொடங்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக கனிமொழி, ஆ.ராசா உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்புபோல் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய செய்த பித்தலாட்டங்களை இனிமேல் செய்ய இயலாது. 

ஆகவே வழக்கு விசாரணை விரைந்து முடிந்தால், விரைவில் கனிமொழி, ஆ.ராசா உள்பட 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீண்டும் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி. 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close