செய்திகள்

மும்மொழிக் கொள்கையால் இந்திக்கு அடுத்த இடத்தை தமிழ் பிடிக்கும்! தமிழின் வளர்ச்சியை கெடுக்க ஸ்டாலின் – வைகோ கோஷ்டிகள் கரகாட்டம்!!

மும்மொழிக் கொள்கையை மூலம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது போன்று வழக்கம்போல தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் சில கோமாளி தலைவர்கள் தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். ஆனால் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி பேசும் மாநிலங்களில் அதிகமானோர், 3 – வது மொழியாக தமிழை தேர்வு செய்யும் நிலையே உள்ளது. இதனால் இந்திக்கு அடுத்த இடத்தை தமிழ் மொழி பிடிக்கும் நிலைக்கு வளரும் என்பதே உண்மை. 

2014 – ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, புதிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி கடந்த பாஜக ஆட்சியில், புதிய கல்விக்கொள்கையை வகுக்க கஸ்துாரிரங்கன் தலைமையில், 9 நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தனது பரிந்துரையை மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்ப்பித்தது. அதனை நேற்று நடந்த, புதிய மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமர்ப்பித்தார்.

484 பக்க கொண்ட இந்த வரைவு அறிக்கை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mhrd.gov.in ) பொதுமக்களின் கருத்து கேட்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஜூன் 30 – ஆம் தேதிவரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும், மும்மொழிக்கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக்கல்வி என்பது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி என்று இருக்க வேண்டும். 

மூன்றாவது மொழித்தேர்வு என்பது, மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து அமைய வேண்டும். அதாவது இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் போன்ற ஏதாவது ஒரு இந்திய மொழியை அவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும். அதேபோல் தமிழைப் போன்று பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தியை 3 – வது மொழியாக கற்க வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியாக தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் போன்ற ஏதாவது ஒரு மொழியை அவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திபேசும் மாநில மாணவர்கள் தொன்மையான நமது தமிழ் மொழியையே 3 – வது மொழியாக தேர்வு செய்வார்கள். இதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய அளவி்ல் இந்திக்கு அடுத்த இடத்தில் அதிகமானோர் பேசும் மொழியாக தமிழ் மொழி வர பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எனவே நமது தாய் மொழியான தமிழ் மொழி வளரும். தமிழன்னையின் புகழ் நாடெங்கிலும் பரவும். தமிழன் உயர்ந்த கலாச்சாரமும், பண்பாடும் பரவும்.

நிலமை இப்படி இருக்க, வழக்கம்போல தமிழ் வளர்ச்சிக்கு, நரேந்திர மோடி அரசால் கிடைக்க உள்ள இந்த அரிய வாய்ப்பை கெடுக்கும் வேலையில் முக ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் போன்ற தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல்கள் இறங்கி உள்ளன. இவர்களின் முக்கிய நோக்கமே தமிழும் வளரக்கூடாது, தமிழனும் முன்னேறக் கூடாது என்பதுதான்.

“இந்த நாசமாய் போனவர்கள், அப்போது எங்களையும் இந்தி படிக்கவிடாமல் கெடுத்தனர். இப்போது எங்களின் பேரப்பிள்ளைகளையும் இந்தி படிக்கவிடாமல் தடுக்கின்றனர்” என்கிறனர் வயதான மூத்த தமிழர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close