அரசியல்செய்திகள்

பாஜகவின் மாபெரும் வெற்றிக்காக உழைத்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்! கொண்டாட்டம் ஏதுமின்றி வழக்கமான பணிகளில் தீவிரம்!!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முதன்முறையாக பாஜக, 303 தொகுதிகளுடன் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வெற்றி மாபெரும் சாதனையாகி உள்ளது. 
இந்த வெற்றிக்கு அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த தொண்டர்களும் கடுமையாக உழைத்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ்சின் சகோதர அமைப்புகளான அகில இந்திய வித்யா பரிஷத், இந்து ஜாக்ரன் மன்ச், விகாஸ் பாரதி, சேவா பாரதி, வித்யா பாரதி, வனவாஸ் கல்யாண் கேந்திரா, தரம் ஜாக்ரன், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 35 – க்கும் அதிகமான அமைப்புகளின் தொண்டர்களும் பாஜகவின் வெற்றிக்காக உழைத்து உள்ளனர்.
இவர்கள் நாடு முழுவதிலும் கிராம அளவில் கடுமையாக உழைத்தனர். பாஜகவினருடன் இணைந்து சட்டப்பேரவை, பஞ்சாயத்துகள் மற்றும் வாக்குச்சாவடிகள் அளவில் குழுக்களை அமைத்து பணியாற்றினர். தேர்தலுக்கு முன்பாகவே பணியைத் தொடங்கியவர்கள், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப்பின் பணியை தீவிரப்படுத்தினர். 
பொதுமக்களைச் சந்திக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களை தவறாமல் வாக்களிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இத்துடன், தீவிரவாதம் ஒழிப்பு, தேசியவாதம், வலிமையான இந்தியா, வளமான இந்தியா ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். இவர்களின் கருத்துக்களுக்கு முதன்முறையாக வாக்களித்த இளம் தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாஜவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தாலும், தேர்தலுக்குப் பின் கொண்டாம், வெற்றி விழா போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் ஆர்எஸ்எஸ் ஈடுபடவில்லை. வாக்குப்பதிவு நடந்த மறுநாளே, தங்களின் வழக்கமான பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈடுபட்டனர்.  தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோதும் அவர்கள் தங்களின் தினசரி அலுவல்களில்தான் ஈடுபட்டு இருந்தனர். இதுதான் ஆர்எஸ்எஸ்சின் வார்ப்பு. 
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா போன்றவர்கள் எல்லாம், ஆர்எஸ்எஸ் என்ற பல்கலைக் கழகத்தில் பயின்ற கண்மணிகள்தான். அதனால்தான் பிரச்சாரம் முடிந்த மறுநாளே, தேர்தல் முடிவுகளைப் பற்றி யோசிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியால் கேதர்நாத் குகையில் தியானத்தில் ஈடுபட முடிந்தது.
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். ஆனால் பாஜகவினர் மட்டுமே அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பார்கள். அதனால்தான், தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரிய தோல்வியை சந்தித்தபோதும், அன்றைய தினம் இரவே தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நிதின் கட்கரியால் அறிவிக்க முடிந்தது.
இதற்கெல்லாம் மூலகாரணம் ஆர்எஸ்எஸ்சின் வளர்ப்புதான்!. 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close