இந்தியா

அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது – வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு உறுதியான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 30 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்பேரில் குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அமைச்சர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்போது ஆசிய மண்டலத்தில் அமைதி, வளர்ச்சி, வளமையை உருவாக்க வேண்டியது அவசியம் என்று இம்ரான்கானிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் வன்முறை, பயங்கரவாதம் இல்லாத சூழல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close