இந்தியா

பிரித்து மேயும் ஊடகங்கள் – பாகிஸ்தானில் கொண்டாடப்படும் பா.ஜ.கவின் வெற்றி : இந்திய பிரதமர்களிலேயே மோடிக்கு கிடைத்த தனி சிறப்பு.!

நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டி உள்ளன.

அந்நாட்டின் பழமைவாய்ந்த பத்திரிகையான டான் நாளிதழ் தனது முதல் பக்கத்தில், “பொதுத்தேர்தலில் மோடி மகத்தான வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தேசத்தின் பாதுகாவலனாக பார்க்கப்படுகிறார்” என செய்தி வெளியிட்டது.

இதே போல் அந்நாட்டின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் மோடியை புகழ்ந்து செய்திகள் வெளியிட்டன. அத்துடன் அந்நாட்டின் செய்தி தொலைக்காட்சி சேனல்களில், மோடி மீண்டும் பிரதமராகி இருப்பது இந்திய-பாகிஸ்தான் உறவில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சிறப்பு விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close