செய்திகள்

அமேதியில் ஸ்ம்ருதி இராணியியுடன் தேர்தல் பணி புரிந்தவர் சுட்டுக்கொலை : ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்ம்ருதி இராணி அபார வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸினர் அராஜகமா?

நாடாளுமன்ற தேர்தலில் உத்திர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர் ஸ்ம்ருதி இராணி அபார வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஸ்ம்ருதி இராணியுடன் நெருக்கமாக பணியாற்றிவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், சுரேந்திர சிங். அவர் நேற்று இரவு, தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து, அவரை சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனை அடுத்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் காங்கிரஸ் கட்சியினர் மீது குற்றம் சாட்டி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியாகவும், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவும் விளங்குவது அமேதி தொகுதி. அங்கு பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணியின் செல்வாக்கு வளர்ந்து வந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ம்ருதி இராணி அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மண்ணை கவ்வினார். இதனை அடுத்த ஸ்ம்ருதி இராணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ஸ்ம்ருதி இராணியின் ஆதரவாளர் சுட்டு கொல்லப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

சுரேந்திர சிங்கின் மகன் கூறுகையில் காங்கிரஸ் கட்சியினர் மீது தான் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close