செய்திகள்

ராகுல்காந்தியின் படு தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ம்ருதி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை : பூத உடலை தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்திய ஸ்ம்ருதி இரானி

நாடாளுமன்ற தேர்தலில் உத்திர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர் ஸ்ம்ருதி இராணி அபார வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஸ்ம்ருதி இராணியுடன் நெருக்கமாக பணியாற்றிவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், சுரேந்திர சிங்

பர்லியா கிராமத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றியை கொண்டாடிய அவரை மர்ம நபர்கள் சிலர் நேற்று (மே 25) நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங், லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி, அமேதி சென்றார். அங்கு சுரேந்தரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

சுரேந்தரின் கொலைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனவும், பா.ஜ.க-வின் வெற்றியை கொண்டாடியதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சுரேந்தரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close