செய்திகள்

விஜய் மல்லயா பணியில் தப்பிச் செல்ல முயன்ற கடனாளி நரேஷ் கோயல், துரத்தி சென்று பிடித்து விமானத்திலிருந்து இறக்கிய மோடி அரசு – இனி மோடியிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது?

லண்டன் பறக்க இருந்த ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவரும் அவர் மனைவியும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் நரேஷ் கோயல். அவர் மனைவி அனிதா நிர்வாக குழு உறுப்பினர். நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தடுமாறியது. வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் திணறிய அந்நிறுவனம் அனைத்து விமான சேவைகளையும் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

வங்கிகளின் நெருக்கடி காரணமாக, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அவர் மனைவியும் பதவியை ராஜினாமா செய்தார். 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளது, அது போக பல கோடி கடன்களையும் வங்கிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும். இந்நிலையில், துபாய் செல்வதற்காக, நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதாவும் மும்பை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

அப்போது இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், புறப்பட இருந்த விமானத்தில் இருந்து அவர்களை கீழே இறக்கினர். போலீசில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மோடி அரசில் இனி யாரும் தப்பிக்க முடியாது என நிரூபனமாகியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close