2019 தேர்தல்

தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஒப்பாரி வைக்கும் வங்காள முதல்வர் மம்தா! ஆளுமையின்மையின் வெளிபாடா?

மம்தா பானர்ஜி முன்னாள் காங்கிரஸ் தலைவர். 90-களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கி மிகக்கடுமையாக களப்பணி செய்து இடதுசாரிகளின் வன்முறை அரசியலை உயிரை பணயன் வைத்து போராடி வீழ்த்தி 2011-ல் அரியணையில் அமர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு வங்காளத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.

2011 வங்காள சட்டசபை தேர்தல், 2014 பாராளமன்ற தேர்தல், 2016 வங்காள சட்டசபை தேர்தல் என இந்த 3 தேர்தல்களிலும் வங்காளத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார் மம்தா. இடதுசாரிகள் நாளுக்கு நாள் தேய்ந்து வரவே எதிர்கட்சியே இல்லாத சூழ்நிலையில் ராணி போல ஆண்டு வந்தார் மம்தா.

இந்நிலையில் தான் பா.ஜ.க-வின் எழுச்சி வங்கத்தில் துவங்கியது. மம்தாவின் அதீத இஸ்லாமிய ஆதரவு, ஹிந்து வெறுப்பு, நிர்வாகமின்மை, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என வங்காளம் சிக்கித் தவிக்கவே பா.ஜ.க-வை மம்தாவிற்கு மாற்றாக வங்காளிகள் பார்க்கத் துவங்கினர். இதை தடுக்க் அத்தனை அடக்குமுறைகளையும் மம்தா கட்டவிழ்த்தார். பா.ஜ.க-வினரை கைது செய்வது, பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறைகளை ஏவுவது, மத்திய அரசு திட்டங்களை முடக்குவது, பா.ஜ.க தலைவர்களின் தேர்தல் பரப்புரைகளை முடக்குவது என ஒரு சர்வாதிகாரியை போல நடந்துக் கொண்டார்.

அதன் பலன் 2019 தேர்தல் முடிவில் தெரிந்து பா.ஜ.க 40% ஓட்டுகளையும் 18 இடங்களையும் கைப்பற்றியது. மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் 43% ஓட்டுகளையும் 22 தொகுதிகளையும் வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சியால் வாயடைத்து போன மம்தா தன் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் தன் தோல்வியை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை கொல்கத்தாவில் சந்தித்த மம்தா “அது எமெர்ஜென்சி காலம் போல் இருந்தது. தேர்தல் ஆணையம் கொடுத்த அழுத்தத்தால் என்னால் செயல்படமுடியாமல் போனது.” என சிறுபிள்ளைத்தனமாக தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஒப்புக்கொண்டு மீண்டு வருபவனே தலைவன் என்ற அடிப்படையில் தன் தோல்வியையே ஒப்புக்கொள்ள மறுக்கும் மம்தா ஒரு சிறந்த ஆளுமையின் வெளிபாடா என்ற கேள்வி தற்போது எழுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close