செய்திகள்தமிழ் நாடு

கிணற்றுத் தவளை : ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹெச். ராஜா

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள், “இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!”, என்று கூறியுள்ளார். தி.மு.க-விற்கே உண்டான மொழி பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்திருக்கும் ஸ்டாலினுக்கு தக்க படிலடியை கொடுத்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளரும், ஹிந்து கோவில்கள் மீட்பு இயக்க தலைவருமான திரு ஹெச். ராஜா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை.”, என்று கூறியுள்ளார்.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் தான் பா.ஜ.க வென்றிருக்கிறது போன்ற தோணியில் பேசியுள்ள ஸ்டாலினுக்கு ஹிந்தி எந்தெந்த மாநிலத்தில் பேசுவார்கள் என்று கூடவா தெரியாது என்று கேள்வி கேட்டு வருகின்றனர் இணைய வாசிகள். தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகத்தில் கூட எந்த மொழி பேசுவார்கள் என்று தெரியாதவரா ஸ்டாலின் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close