இந்தியாசெய்திகள்

ராபர்ட் வாத்ராவிற்கு முன் ஜாமீன் நீக்கப்படுமா ? பாட்டியலா கோர்ட்டில் முறையிட்டுள்ளது அமலாக்கத்துறை.

லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக பணமோசடி வழக்கில், ராபர்ட் வாத்ரா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மனோஜ் அரோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி ஏற்கனவே கடந்த மார்ச் 27 ல் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஏப்.1ல் முன் ஜாமின் பெற்றார்.

அப்போது வெளிநாட்டிற்கு செல்லக் கூடாது, 5 லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ராபர்ட் வாத்ராவிற்கு ஜாமின் அளித்தார் நீதிபதி. அதில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அறிவுரையும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராபர்ட் வாத்ராவின் மீது போடப்பட்டது கறுப்பு பண தடுப்பு வழக்கு என்றும் இது அரசியல் ஆக்கப்படுவது தவறு என்றும், ராபர்ட் வாத்ரா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் அவரது முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டியலா கோர்ட்டில் மீண்டும் முறையிட்டுள்ளது அமலாக்கத்துறை.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close