அரசியல்செய்திகள்

அதிமுகவுடன் இணையும் தினகரன்.. அமமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..?

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததுடன், நிறைய இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘டிவிட்டரில்’ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்களில் தமிழக மக்கள் அழித்துக்க தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்களுக்கும்,இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க மக்கள் பணியாற்ற சுயேட்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், கழகத்துக்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும், நன்றிகளை காணிக்கையாக்குகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே நேற்று மாலை தனது கழக உறுப்பினர்களுடன் திரைமறைவில் பேசிய தினகரன், என்ன இருந்தாலும் அ.தி.மு.க நம் கட்சி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. அதனால் வருகின்ற காலங்களில் நாம் அ.தி.மு.க-வுடன் ஒன்றுபட்டால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்போது தினகரன் அ.தி.மு.க-வில் இணைவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப் படுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close