சினிமா

மோடி என் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கிறது…பிரகாஷ்ராஜ் புலம்பல் !!

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கௌரி மங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹிந்துத்துவா அமைப்புக்களை தொடர்புபடுத்தியும் விமர்சித்து வந்தார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.ரஜினிகாந்த,கமலஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய நிலையில் பிரகாஷ்ராஜூம் அரசியலில் குதித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் காலம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரச்சாரமும் செய்தார். ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை, தோல்வி அடைந்துள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டிவிட்டரில். என் கன்னத்தில் அறை விழுந்ததுபோல் போல் இருக்கிறது.”இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன.எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். பாதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடருவேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி. என்று கூறியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close