2019 தேர்தல்இந்தியாசெய்திகள்

காங்கிரஸ் கூடாரம் காலியாகிறது – தேர்தல் முடிவுகள் எதிரொலி? மாநில தலைவர்கள் ராஜினாமா?

நாடாளுமன்ற தேர்தலில் நாடுமுழுவதும் அடைந்த படுதோல்வி காரணமாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகின்றனர். நாளை காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் நடக்க உள்ள நிலையில் தலைவர்களின் ஓட்டம் அக்கட்சி தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறையை போலவே இந்த தேர்தலிலும் வெறும் 52 எம்.பி., தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது காங்கிரஸ் கட்சி. 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு எம்.பி.,தொகுதியை கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாமல் போனது.

இதனால், கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்துவிட்டனர். மேலும், பல மாநில, மத்திய அமைப்பின் நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனால், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் முழக்கம் வெற்றிபெற்று வருவதாக, காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலங்கிப் போயுள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close