அரசியல்செய்திகள்

அமைச்சர்கள் பட்டியல் ரெடி- ஆட்சி அமைக்க தயாராகும் மோடி அரசு !!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதால், மீண்டும் ஆட்சி அமைக்கும் பணிகளை பா.ஜ.க துவக்கி உள்ளது

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், அமைச்சரவையில் பங்கேற்றவர்களுக்கு பா.ஜ.க மோடி மற்றும் அமித் ஷா தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் 36 கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்காத 3 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஆதரவு கடிதம் அளித்துள்ளதாகவும் விருந்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பா.ஜக மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, தேசியவாதம் மற்றும் வளர்ச்சி ஆகிய மூன்றையும் அடிப்படையாக கொண்டு புதிய அரசு அமைக்கப்பட உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் பிற தேவைகள், வளர்ச்சி திட்டங்களை வேகப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது தவிரஇந்த கூட்டத்தில் அமைச்சரவை பட்டியல் தயாரக இருப்பதாகவும்,
அமித் ஷாவிற்கு பாதுகாப்பு துறை அல்லது உள்துறை அமைச்சர் பதவியும் நிர்மலா சீதாராமனுக்கு வெளியுறவு துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.அதிமுக அமைச்சரவையில் இடம் பெறும்.என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது

நாளை(மே 23) ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஜனாதிபதியை சந்திப்பது, பதவியேற்கும் தேதி உள்ளிட்ட புதிய அரசமைப்பதற்கான நடைமுறைகளை துவக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Tags
Show More
Back to top button
Close
Close