செய்திகள்தமிழ் நாடு

சிவன் கோயில் சொத்தில் கிறிஸ்தவ சர்சு! திரிசூலத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விற்பனை செய்தனர்! பணத்திற்காக மனைவி, மக்களையும் தாரைவார்ப்பார்களா? பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ளது திரிசூலம். இங்கு மலைமீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர். திரிசூலநாதர் பெயரால்தான் இந்த ஊர், திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலுக்கு சொந்தமாக, நுாறு ஏக்கருக்கும் மேற்பட்ட, பட்டா நிலம் உள்ளது. கோவிலை சுற்றி மட்டும், 80 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கோவிலின் நித்திய பூஜைகள், திருவிழாக்கள், கோவில் முகப்பில் உள்ள சத்திரத்தில், சிவ பக்தர்களுக்கு, எப்போதும் அன்னதானம் வழங்கப்பபட்டு வந்தது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்தபின், கோவிலின் பாரம்பரியம் சிதைந்து போனது. அன்னச்சத்திரங்கள் பாராமரிக்கப்படாமல் பாழடைந்தன. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும், குத்ததைகக்கு விடப்பட்டன. பின்னர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு, கோவில் நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்றனர். கடந்த.ஒன்பது ஆண்டுகளில் மட்டும், இக்கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலம், 70 ஏக்கருக்கு மேல், விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து, ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:- காஞ்சி மாவட்டம், ஆலந்துார் வட்டம், திரிசூலம் வருவாய் கிராமத்தில், சர்வே எண், 29 முதல், 97 வரை, 60 ஏக்கருக்கும் மேற்பட்ட நன்செய், 20 ஏக்கருக்கும் மேற்பட்ட புன்செய் நிலங்கள், திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமானவை. இந்த நிலங்கள், கோவிலைச் சுற்றியே உள்ளன. இவை அனைத்துக்கும், திரிசூலநாதர் பெயரிலேயே பட்டா உள்ளது. இதில், 70 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுபோட்டு விற்பனை செய்துள்ளனர். கோவில் பட்டா நிலத்தை, 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி விற்பனை செய்துள்ளனர். இதற்கு, ஊராட்சி, மின்வாரியம் ஆகியவையும்; உடந்தையாக இருந்து வருகின்றன. ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடத்தில், சகல வசதிகளுடன், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன் உச்சகட்டமாக சிவன் கோயில் சொத்தில் சர்ச்சு கட்டி உள்ளனர். இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து உள்ளனர். பணம் கிடைக்கிறது என்றால் தங்கள் மனைவி மற்றும் மக்கள்களையும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தாரைவார்த்து விடுவார்களா?

சிவன் சொத்து குலநாசம் என்று சொல்வார்கள். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நிச்சயம் இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். இது சிவன் கணக்கு. விரைவில் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

Tags
Show More
Back to top button
Close
Close