சினிமா

கணவரின் வெற்றிக்காக அரை மணி நேரம் அழுத சமந்தா.!

திரைப்படக் கலைஞர்களை பொறுத்தவரை வெற்றி என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும். அதே மாதிரி ஒரு படத்தின் வெற்றி அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும்.

அதே போன்று ஒரு படத்தின் தோல்வி அவர்கள் வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப் போட்டு விடும். எல்லோருமே வெற்றிக்காகத்தான் உழைக்கின்றனர்.

ஆனால் எதிர்பார்க்கும் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

இந்நிலையில், நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பின்னர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘மஜிலி’ படம் மகத்தான வெற்றியை பெற்றது.

அப்படத்தின் வெற்றி பற்றி முதல் செய்தியைக் கேட்டவுடன் சுமார் அரை மணி நேரம் சமந்தா அழுதார் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாலையே எழுந்திரிச்சி கணவரின் படத்தின் வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டாராம். மஜிலி படம் நாகசைதன்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close