செய்திகள்

விஜய் படங்களை புறக்கணிக்க ரசிகர்கள் முடிவு! விஜய் மக்கள் மன்றத்தில் இருந்தும் வெளியேறுகின்றனர்! இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பாடம் கற்பிக்க அதிரடி!

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னையில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்று வெளியான கருத்துக்கணிபு குறித்து பேசினார்.


“கருத்துக்கணிப்பு நிலவரங்களை பார்க்கும்போது மக்கள் மீண்டும் தவறு செய்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இனி நாம் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டுதான் திரியப் போகிறோம்” என்று தனது மனதில் உள்ள நஞ்சை கக்கினார்.

நடிகர் விஜய்யோ, அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ, நரேந்திர மோடியை உள்நோக்கத்துடன் குறைசொல்வதோ அல்லது பாஜக ஆட்சியை தவறாக சித்தரிக்க முற்படுவதோ புதிதில்லை. அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே சினிமா வசனங்கள் மூலமாகவும், நிகழ்ச்சிகளில் பேசும்போதும் உண்மையை திரித்து உள்நோக்கத்துடன் குறைகூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றைக்கூட மக்கள் மன்னித்துவிட்டனர்.


ஆனால் நரேந்திர மோடியை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இந்துக்களை இழிவு படுத்துவதைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு குல்லா எப்படி புனிதமானதோ… கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கு அங்கி எப்படி புனிதமானதோ… அதுபோல இந்துக்களுக்கு காவி வேட்டி புனிதமானது. அப்படிப்பட்ட புனிதமான காவி வேட்டியை நடிகர் விஜயின் தந்தை இழிவுபடுத்தி பேசியது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், நடுநிலையாளர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயின் ரசிகர் மன்றமான மக்கள் மன்றத்தில் உள்ள இந்து ரசிகர்கள், இனிமேல் வெளியாகும் விஜயின் புது படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேறவும் அவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், ”விஜயின் ரசிகர்களில் 95 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளர். விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கிறிஸ்தவராக இருப்பது தெரிந்தும், நாங்கள் மதம் பார்க்காமல் செயல்பட்டு வந்தோம். போஸ்டர் ஒட்டுவது முதல் படத்தை வெற்றிபெறச் செய்வது வரை நாங்கள் வெறித்தனமாக உழைத்து உள்ளோம். விஜயின் அப்பாவை நாங்களும் அப்பா என்றுதான் அழைத்து வந்தோம். இப்படி இருந்தும் அவர் கிறிஸ்தவ மதவெறியை கக்கும் விதமாக இந்துக்கள் புனிதமாக நினைக்கும் காவி வேட்டியை இழிவுபடுத்தி பேசி உள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். இனிமேல் வெளியாகும் விஜயின் புது படங்களையும் நாங்கள் புறக்கணிப்போம்.” என்றார்.

விஜயும், அவரது தந்தையும் ஏன் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய பாஜக அரசையும் விமர்சிக்கிறார்கள் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 2014 – ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, நரேந்திர மோடிதான் பிரமதர் ஆவார் என்று தெரிந்ததும், கோவைக்கு சென்று அவரை நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டார். இதனால் வருமான வரிகட்டாமல் இருப்பது, சட்டத்திற்கு புறம்பான முதலீடுகள் போன்றவற்றில் நரேந்திர மோடி அரசு கண்டுகொள்ளாது என்று நடிகர் விஜய் தப்புக்கணக்கு போட்டார். ஆனால் நரேந்திரமோடி அரசு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. விஜய் வருமானவரி கட்டாமல் மோசடி செய்து வந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் அவர்கள் விஜயின் வீட்டில் 2 நாட்கள் இரவு பகலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நோதனையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சிக்கியது.

தனது படங்களில் தன்னை ஒரு யோக்கிய சிகாமணிபோல காட்டிக்கொண்டு வீராவசனம் பேசும் விஜய்தான், ஒழுங்காக வருமான வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வந்துள்ளார் என்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. அதோடு இனிமேல் இதுபோல் வருமானவரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றினால் என்னை கைது செய்துகொள்ளலாம் என்றும் அப்போது வருமான வரித்துறைக்கு விஜய் எழுதிகொடுத்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் அவரின் முதலீடுகள் பெருமளவில் கருப்புப்பணமாகவே இருந்துள்ளது. சம்பளம் வாங்கியதும் கருப்பு பணம், தனது வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுத்ததும் கருப்புப்பணம், சொத்துக்கள் வாங்கி குவித்ததும் கருப்புபணத்தில்தான்… இப்படி கருப்பு பணத்திலேயே கோட்டைகட்டி “ஓஹோ“ என்று வாழ்ந்து வந்த நடிகர் விஜய் குடும்பத்திற்கு, ஒழுங்காக வரியைகட்டி நேர்மையாகவாழ வலியுத்தும் நரேந்திர மோடி அரசை எப்படி பிடிக்கும்?

நடிகர் விஜயை போன்ற கருப்புப்பண கும்பல்களுக்கு, 2016 – ஆம் ஆண்டு நவம்பர் 8 – ஆம் தேதி இரவு 8 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேட்டு வைத்துவிட்டார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் கருப்புப்பணமாக பதுக்கி வைத்திருந்த பல நூறு கோடி ரூபாயை இழக்க நேர்ந்தது. இதையெல்லாம் எப்படி வெளியில் சொல்ல முடியும்? திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக நடிகர் விஜய்கும், அவரைப் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கும் அமைந்துவிட்டது.

அதுமட்டுமல்ல இப்போது விஜய் வாங்கும் முழு சம்பளத்தையும் கணக்கில் காட்டி அவற்றிற்கு வரிகட்ட வைத்துவிட்டார் நரேந்திர மோடி. வாங்கி குவிக்கும் சொத்துக்களுக்கும் கருப்புபணம் பயன்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் வந்தது. இதில் எப்படியாவது காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று கதவை அடைத்துககொண்டு இரவெல்லாம் ஜெபம் செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிட்டால் மீண்டும் கருப்பணத்தை பதுக்கலாம், வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றலாம் என்று கனவுகண்ட விஜய்க்கு அந்த கனவில் மண் விழுந்தது.

இப்போது பொதுவெளியில் புலம்ப தொடங்கி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயின் ஊதுகுழல் அவர்தானே? அதுதான் அவர் தன் கடமையை செய்துள்ளார்.

இதனுடன் சேர்த்து, இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையையும் செவ்வனே அரங்கேற்றி உள்ளார்.

நேர்மையாக வாழ வேண்டும் என்கிறார் நரேந்திர மோடி!

இந்து மதமும் இதைத்தான் போதிக்கிறது. ஆகவேதான் இந்துமத அவமதிப்பு வேலையில் இறங்கி உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற கிறிஸ்தவர். ஆனால் ரசிகர்கள் சரியான பாடத்தை புகட்ட தயாராகிவிட்டனர்.

Tags
Show More
Back to top button
Close
Close