சினிமா

டப்பிங் கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட ராசி கன்னா.!

அடங்க மறு, அயோக்யா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்த ராசி கன்னா, தற்போது சைத்தான் கா பச்சா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அயோக்யா படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அவருக்கு டப்பிங் கலைஞர் ரவீணா ரவி டப்பிங் பேசியிருந்தார். ஆனால், அவரது பெயர் படத்தின் டைட்டிலில் இடம் பெறவில்லை.

இது பற்றி தனது வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் ரவீணா பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராசி கன்னா, அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இது பற்றி அவர் கூறுகையில்: ‘மிகவும் வருத்தப்படுகிறேன் ரவீணா. உங்கள் அழகான குரலை இப்படத்தில் எனக்கு பேசியதற்கு மிகவும் நன்றி. எனது நடிப்பு அனைவரும் ரசிக்கும் அளவு இருந்ததற்கு உங்கள் இனிமையான குரல்தான் முக்கிய காரணம்’ என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close