அரசியல்செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது – பயத்தில் கதறும் பாகிஸ்தானியர்கள்!! குமுறும் பாகிஸ்தான் டிவி சேனல்கள்!!

இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி மீண்டும் பிரதமாகக்கூடாது என பாகிஸ்தானியர்கள் அங்குள்ள ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் வந்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் பலர் கருத்துக்களை சொல்லி உள்ளார்கள்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து மே 19ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரம் பாகிஸ்தான் மக்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல் மற்றும் கருத்துக்கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என பாகிஸ்தானியர்கள் பலரும் விரும்புகிறார்கள். இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. அதில் பலரும் மோடி மீண்டும் பிரதமாக வந்தால் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவார் என்று கூறி, அது பாகிஸ்தானுக்கு நல்லதில்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லாகூரைச் சேர்ந்த சாஹி அலாம் என்பவர் பாகிஸ்தான் டிவிசேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவார் என்றார். இதேபோல் ஆசாத் என்பவர் அளித்த பேட்டியில், மோடி மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் குறைந்த தொகுதிகளில் வெல்லவே வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பாகிஸ்தானுக்கு நல்லது என்றார். லாகூரைச் சேர்ந்த பிசினஸ்மேன் ரியாஸ், இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கும், பாகிஸ்தானில் பிறந்த வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த விசயத்தில் சிந்தனையில் மாறுபட்டு இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதோடு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வந்தால் காஷ்மீர் உள்பட பிரச்னையில் நிரந்த தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.ஆனால் அங்குள்ள மக்கள் மோடி மீண்டும் வரவே கூடாது என்று இந்திய தேர்தல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மோடி தோற்றுவிட்டால் காஷ்மீரை சுலபமாக கைப்பற்ற முடியும் என்று சில பாகிஸ்தானியர்கள் கூறி வருகிறார்கள்

Tags
Show More
Back to top button
Close
Close