செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஹிந்து மாணவிகள் குரான் படித்து தேர்ச்சி!! மதம் மாற்றும் முயற்சியா அல்லது மத நல்லிணக்கத்தை போதிக்கும் நிகழ்வா?

மேற்குவங்கத்தில் இஸ்லாமிய மதக் கொள்கைகளை போதிக்கும்,மதரசா பள்ளியில் படித்த மூன்று ஹிந்து மாணவிகள், தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு புர்த்வான் பகுதியில், கெட்டுகிராமில் உள்ள அகோர்தங்கா மதரசா பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 60 சதவீதத்தினர் ஹிந்துக்கள். அங்கு சுமார் 900 ஹிந்து மாணவர்கள், இஸ்லாமிய மதக் கொள்கைகளை பயின்றனர். அப்பள்ளியில் தேர்வு எழுதிய 62 மாணவர்களில் 45 பேர் பெண்கள்.
மேற்குவங்கத்தில் கடந்த வாரம் மதரசா தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில், அகோர்தங்கா மதரசாவில் படிக்கும் 3 ஹிந்து மாணவிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

மதரசாவில் மத்யமிக் பிரிவில் படித்து, 800 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், பியூபியா சகா, சதி மோதக் மற்றும் அர்பிதா சகா என்ற மாணவிகள் முறையே 730 (91.25%), 730 மற்றும் 739 (92.38%) மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். குறிப்பாக அடிப்படை முஸ்லிம்களின் வரலாற்று பாடத்தில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இம்மாணவிகள் முறையே 95, 92 மற்றும் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகளின் வெற்றியை கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

முஸ்லீம்கள் அல்லாத மாணவர்கள் மதரசாக்களில் படிப்பது, மேற்குவங்கத்தில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் மதரசாக்களில் பயிலும் மாணவர்களில் 12 சதவீதத்தினர் முஸ்லீம் அல்லாதவர்கள். இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம்கள் இதுபோல் பகவத்கீதையை படித்து மத நல்லிணக்கதை போதித்தால் மற்ற நாடுகளுக்கு இந்தியா சிறந்த நாடக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Tags
Show More
Back to top button
Close
Close