தமிழ் நாடு

1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி – நாசம் செய்யப்படும் வரலாறு..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான் மலையில்  இந்து கோயில்களை இடித்து நாசம் செய்து விட்டு அந்த இடத்தில் பிரமாண்ட மசூதி ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரி ஆண்ட பறம்பு நாட்டின் தலைநகரான பறம்பு மலை தற்போது பிரான் மலை என அழைக்கப்படுகிறது.

கடினமான மலை பாதையில் 6 கி.மீ ஏறி மலை உச்சியை ஆடைந்தால் ஒரு சிறிய கற்கோவில் உள்ளே விநாயகர் சிலை. பாதி இடிந்து விழுந்த நிலையில் சுவர்கள் சிதிலமடைந்த கோபுரம்.

பிள்ளையார் கோவிலை தாண்டினால் ஒரு குன்றில் வேல்கள். ஒரு யூகமாக இது தான் முருகன் கோவில் என அறியலாம். இங்கேயும் அதேபோல் உடைக்கப்பட்ட உண்டியல். தலையில்லாத மூஞ்சுறு(பிள்ளையார் வாகனம்). இரண்டு கோவிலுக்கும் பூசாரியே கிடையாது.

இந்த இரண்டு கோவிலின்(குன்றின்)நடுவே பள்ளத்தில் ஒரு தர்ஹா. ஒரு நாளைக்கு நூறிலிருந்து இருநூறு பேர் வந்து செல்கிறார்கள். மேலே பார்த்த கோவில்களுக்கு சேர்ந்தாற்போல் பத்து நபர் வந்தால் ஆச்சரியம்.

தர்ஹாவில் இருந்த ஒருவரிடம் “இந்த மசூதி எப்ப கட்டப்பட்டது?” என்று கேட்டால்.“சுமார் 1000 வருஷம் இருக்கும் ” என்கிறார்.
இது என்ன கணக்குனு தெரியல. உண்மையில் இந்த மசூதி ஐம்பதிலிருந்து தொன்னூறு வருட பழமையா இருக்கலாம்.

இந்த பிள்ளையார் கோவில் கட்டி ஆயிரம் வருடங்கள் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி கொஞ்ச உயரம் ஏறிபோனால் அங்கே ஒரு கோவில் இருந்ததற்கான அடையாளம் இருக்கு பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உடைந்து கிடந்தது. ஆக கண்டிப்பாக ஆதியில் இங்கே ஒரு சிவன் கோவில் இருந்திருக்கலாம்.

இந்த கோவில்களையெல்லாம் அறநிலையத் துறையினர் கண்டு கொள்வதேயில்லை என்பது மிக வருத்தமளிக்கிறது.இந்த பிரான்மலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 50 kms தொலைவில் உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close