செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் எம்.எல்.ஏ உட்பட 11 பேரை படுகொலை செய்த கிறிஸ்துவ தீவிரவாத அமைப்பான என்.எஸ்.சி.என் ?

நேற்று காலை சுமார் 11.30 மணிக்கு போராப்பள்ளி என்ற பகுதியில் தனது குடும்பத்தார் மற்றும் பாதுகாவலர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்,கோன்சா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ, திரோங் அபோ. அப்போது திடீரென தீவிரவாத கும்பல் ஒன்று இந்த காரை வழி மறித்துள்ளது. இதன்பிறகு திரோங் அபோ, அவரது குடும்பத்தார் மற்றும் அவரது பாதுகாவலர்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டது அந்த கும்பல்.

இந்த சம்பவத்தில் எம்எல்ஏ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேரும் கொல்லப்பட்டனர்.

என்.எஸ்.சி.என் தீவிரவாத அமைப்பினரிடமிருந்து திரோங் அபோவிற்கு ஏற்கனவே பலமுறை மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே அந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்க கூடும் என தெரிகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, தேசிய மக்கள் கட்சி தலவைரும் மேகாலயா முதல்வருமான கன்ராட் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் நேரடியாக இந்த விவகாரத்தை மேற்பார்வையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

என்.எஸ்.சி.என் என்ற தீவிரவாத அமைப்பு, கிறிஸ்துவ தீவிரவாத அமைப்பு என்றும், நாகாலாந்து கிறிஸ்துவர்களுக்கே என்ற கோஷத்தையும் முன்வைக்கும் அமைப்பு என்று கூறப்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்பு இதற்கு முன்பு பல பாதுகாப்பு படை வீரர்களை கொலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close