இந்தியா

ஒட்டுமொத்த உலகிலும் இந்தியா தான் டாப் – GDP வளர்ச்சியில் முதல் 10 இடங்களை தட்டி தூக்கிய இந்திய நகரங்கள் : சரித்திர சாதனை.!

நியூயோர்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டன் ஆகியவை உலகின் மிகச் செல்வந்த நகரங்களாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் GDP அடிப்படையில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் உலகில் முதல் பத்து இடங்களை இந்திய நகரங்களே பிடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் விரைவான பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக பொருளாதார மையம் கணித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளால் இது சாத்தியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 7 சதவீத அளவுக்கு உள்ளது. இது விரைவான வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக உயர்வதற்கு வழியேற்படுத்தியுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார கணிப்பின் படி, 2019 மற்றும் 2035 க்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் மிக வேகமாக வளர்ந்துவரும் முதல் பத்து நகரங்கள் இந்தியாவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடமேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரம் தான் உலகின் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது.

2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், அனைத்து ஆசிய நகரங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நகரங்களை ஒன்றாக சேர்த்தால் கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். இதுவே 2035 ஆண்டுக்குள் 17% அதிகமாக இருக்கும். இதில் ஆசிய நாடுகளின் பங்களிப்பில் இந்தியாவின் பங்கு அளப்பரியதாக இருக்கும்.

ஆதாரம்: https://www.weforum.org/agenda/2018/12/all-of-the-world-s-top-10-cities-with-the-fastest-growing-economies-will-be-in-india

Tags
Show More
Back to top button
Close
Close