செய்திகள்

குஜராத்தில் சங்கிலி பறிப்புக்கு 10 ஆண்டு ஜெயில்! பாஜக அரசின் புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடப்பது போன்று குஜராத் மாநிலத்திலும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தன. இதனை கட்டுப்படுத்த சங்கிலி பறிப்பு குற்றவாளிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3ஆண்டு சிறை தண்டைனையை அதிகரிக்க செய்ய முடிவு செய்தது குஜராத் பாஜக அரசு.

இதன்படி சங்கிலி பறிப்பில் ஈடுபடுவோருக்கு  10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகைசெய்யும் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.  இந்த சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை பெற ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்..

எனவே இனிமேல் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவோருக்கு  10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும்விதிக்கப்படும்.

.இதுபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தினால் இங்கும் சங்கிலி பறிப்பு குற்றங்கள் வெகுவாக குறையும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு..

Tags
Show More
Back to top button
Close
Close