ஊடக பொய்கள்

சிவசேனாவில் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் வாங்கிய ரிலையன்ஸ் – தேர்தல் முடிவுக்கு பயந்து அம்பானி வழக்கை வாபஸ் வாங்கினார் என போலி செய்தி பரப்பும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்!

ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றதை திரித்து ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைகளில் பல அவதூறுகளை பரப்பி வந்தார். இந்த அவதூறுக்காக உச்ச நீதிமன்றமே அவரை கடிந்துக் கொண்டதும், அதற்காக ராகுல் காந்தி நீதிமன்றம் மன்னிப்பு கேட்டதும் நாடறிந்த கதை.

இந்நிலையில் அக்காலக்கட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருந்த மும்பையை சேர்ந்த பிரியங்கா சதூர்வேதியும் ரிலையன்ஸ் நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி வந்ததால், அவர் மீது ரிலையன்ஸ் நிறுவனமும், அனில் அம்பானியும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்து அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி, சிவ சேனா கட்சியில் ஐக்கியமானார் பிரியங்கா சதுர்வேதி.

அவர் காங்கிரஸில் இருந்து விலகியதால் இனி அவர் மீது அந்த வழக்கை தொடர்வது தேவை இல்லை என கருதியதால் ரிலையன்ஸ் நிறுவனம் அவ்வழைக்கை வாப்பஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது.

இந்த முழுமையான உண்மை செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லாமல் தமிழக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் போலி செய்தியை பரப்பி வருகின்றனர். அதாவது, தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் ஜெயித்து விடும் என்று பயந்த அம்பானி காங்கிரஸ் கட்சி மீது தொடுத்த வழக்கை வாப்பஸ் வாங்கி விட்டார் என்று சிறிதும் ஊடக தர்மமின்றி போலி செய்திகளை பரப்பி வருகின்றன முன்னனி தமிழ் ஊடகங்கள்.

ஆக, உண்மை செய்தியை பரப்பாமல் கருத்து திணிப்பை முன்னெடுக்கும் இந்த ஊடகங்கள், ஊடக தர்மத்தை பின்பற்றுகின்றனவா என்ற கேள்வி மக்களிடம் தற்போது எழுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close