இந்தியா

பிரதமர் மோடிக்காகவே வாக்களித்த வாக்காளர்கள் : சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி அம்பலப்படுத்திய உண்மைகள் – தோலுரிக்கப்பட்ட காங்கிரஸ் சதி..!


பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் காங்கிரஸ், தனி குழுவை வைத்து வதந்தி பரப்பினாலும் மோடியின் தலைமை மீது இருந்த ஈர்ப்பு மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளதாக சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.  

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாகின.

இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.  இந்தநிலையில் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை பிரதமர் பதவிக்கு மக்களின் பெருமளவு தேர்வு நரேந்திர மோடியாக இருந்துள்ளது. நாடுதழுவிய அளவில் அவருக்கு 44% அளவில் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 24% ஆதரவு மட்டுமே உள்ளது.

இந்த சதவீத அளவு என்பது இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு தேசிய சராசரியை விடவும் கூடுதலாக உள்ளது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அந்த மாநிலங்களில் பட்டதாரிகள், இளைஞர்கள் அதிகமான ஆதரவு உள்ளது. பாஜக அரசை விடவும், பிரதமர் பதவியில் மோடி நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தி  மொழி  பேசும் மாநிலங்களில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

பல தொகுதிகளில் உள்ளூர் பாஜக வேட்பாளர்கள் மீது வாக்காளர்களுக்கு அதிருப்தி இருந்தபோதிலும் கூட அவர்கள் அதனையும் கடந்து, வேட்பாளர்களை பற்றி கவலைப்படாமல் மோடிக்காகவே வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2014-ம் ஆண்டு தேர்தலை விடவும் தற்போது செல்வாக்கு அதிகரித்து இருந்தாலும் கூட அது மோடியின் செல்வாக்கை விடவும் பின் தங்கியே இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இவ்வாறு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close