தமிழ் நாடு

வாட்ஸ்ஆப்பில் “மரணம் எங்கள் இலக்கு” குரூப் – தமிழகத்தை கதிகலக்கிய பயங்கரவாத நடவடிக்கை : என்.ஐ.ஏ காட்டிய அதிரடி..!

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தொடர்புடைய சிலர் வாட்ஸப் மூலம் ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் முகம்மது ரஷீத் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

முகம்மது ரஷீத் துபாயில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது வீட்டில் இருந்து 2 லேப்டாப்புகள், 2 ஹார்டு டிஸ்குகள், 8 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் சேலம், ராமநாதபுரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். “மரணம் எங்கள் இலக்கு” என்ற வாட்ஸப் குழுவைத் தொடங்கி தீவிரவாத செயல்கள் தொடர்பான தகவல்களை இவர்கள் பரிமாறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close