செய்திகள்தமிழ் நாடு

ச்சீ.. கேவலம், நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு? இதெல்லாம் ஒரு பத்திரிகையா? : ஊடகத் துறையின் “ஆபாச கூத்து” நக்கீரன் கோபால்?

#MeToo என்ற hashtag-ல் பெண்கள் தங்கள் பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து வந்தனர். தங்கள் பாதுகாப்பு கருதி பல பெண்கள் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தாமல் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை மட்டும் பதிவிட்டு வந்தனர்.

தமிழகத்தில் பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளி உலகிற்கு சொல்ல தயங்கிய நிலையில், பாரதி கண்ட புதுமை பெண்ணாக பாடகி சின்மயி தனக்கு திரைத்துறையில் நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்தார். அதில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவர், கவிஞர் வைரமுத்து. பாடகி சின்மயி துணிச்சலாக வைரமுத்துவின் காம வெறியாட்டங்களை வெளியே உரக்க சொன்ன போது, பல பெண்களும் தங்களுக்கு திரைத்துறையில் வைரமுத்துவால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்தனர். கோடம்பாக்கத்தில் வைரமுத்து நடத்தி வந்த பெண்கள் விடுதியில் இருந்த இளம் பெண்களை கூட வைரமுத்து விட்டு வைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி கூட, “வைரமுத்து இப்படி தான் என்பது ஓபன் சீக்ரெட்” என்று போட்டு உடைத்தார்.

ஒருவர், இருவர் இல்லை, பல பெண்கள், பல்வேறு இடங்களில் வைரமுத்துவால் பாலியல் தொல்லைக்கு ஆளானதை பகிர்ந்து கொண்டனர். ஆனால், தமிழக ஊடகங்களோ முதலில் சின்மயிக்கு செவி சாய்க்க பெரிதும் தயங்கின. ஆங்கில ஊடகங்கள் சின்மயியின் குற்றச்சாட்டுகளை கையில் எடுக்கவே, வேறு வழி இன்றி தமிழக ஊடகங்களும் கையில் எடுத்தன. ஆனால், தமிழக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் நடந்து கொண்ட விதம் தமிழக ஊடகங்களின் நோக்கத்தை தான் சந்தேகிக்க செய்தன. இன்று வரை, வைரமுத்துவிடம் சென்று ஒரு சிறிய கேள்வியை கூட கேட்க தைரியமும், முதுகெலும்பும் இல்லாத கோழை ஊடகவியலாளர்கள் பாடகி சின்மயியை கொலை குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்டு, அவர் கை எடுத்து கும்பிட்டு கெஞ்சும் அளவிற்கு சின்மயியை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

அது மட்டும் இல்லாமல், அன்று முதல், பாடகி சின்மயியை ஆபாசமாக வசை பாடுவதை சமூக வலைத்தளங்களில் பலரும் வேலையாகவே கொண்டிருந்தனர். வைரமுத்துவை தாங்கி பிடிக்கும் நோக்கில் ஊடகவியலாளர்கள் துவங்கி பலரும் சின்மயியை வசை பாடியது தான் தமிழகத்தின் “பெண் சுதந்திரமாக” திகழ்கிறது. எப்போது, #MeToo ஹேஷ்டேகில் பாடகி சின்மயி குரல் கொடுக்க துவங்கினாரோ அன்று முதல், பாலியல் குற்றங்ளுக்கு எதிராக ஓயாமல் குரல் கொடுத்து வருகிறார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு எதிராக மிகவும் மனம் வருந்தி தனது வேதனைகளை கொட்டி தீர்த்தார் பாடகி சின்மயி. பெண் சுதந்திரம் எல்லாம் வெறும் வாய் பேச்சிற்கு மட்டும் தானா ? என்று கேள்விகளை அடுக்கடுக்காக முன் வைத்தார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் நடந்த விதத்தை பகிர்ந்து வேதனையுற்றார் பாடகி சின்மயி. ஆனால், சில ஊடகங்கள் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களை அரசியல் பிரமுகர்களுடன் சம்மந்தபடுத்தி இதை அரசியலாக்கின. அப்போது நக்கீரன் பத்திரிக்கையும், அதன் ஆசிரியர் நக்கீரன் கோபாலும் இந்த பாலியல் சம்பவங்களை எப்படி அரசியல் ஆக்கினர் என்பது தமிழகம் அறிந்ததே. நீண்ட நாட்களாக மௌனமாக இருந்த வைரமுத்து, பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை தனது “இமேஜ் ரீ பில்டிங்கிற்கு” பயன்படுத்தி கொண்டார் போல் தெரிகிறது. சில மாதங்களாக பத்திரிகையளர்களையே சந்திக்காமல் இருந்த அவர், அப்போது கவிதை பாடி காணொளி ஒன்றை வெளியிட்டார். உடனே அந்த காணொளியை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் பெரும் அளவில் பரப்பின. இதை பார்த்து பாடகி சின்மயி முகநூலில் வைரமுத்துவை விமர்சித்து பதிவிட்டார். பெண் சுதந்திரம் பற்றி யாரெல்லாம் பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது என்று வேதனையுடன் பதிவிட்டார்.

இந்த நிலையில், தற்போது பாடகி சின்மயியை மிகவும் கேவலமாக, ஆபாசமாக சித்தரித்து, நக்கீரனின் சினி கூத்து என்ற பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.

“நீதி மேட்டர்ல ‘வெடை’க்குது சின்மயிங்கிற ‘பார்ட்டி’. பொள்ளாச்சி மேட்டர் வந்தப்ப இப்படி குப்புறடிச்சி எங்க ‘விழுந்து’ கெடந்துச்சோ”, என்ற வாசகத்துடன் நடிகை ஒருவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதனை பார்க்கும் போது அறுவருப்பும் வேதனையும் தான் வருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் மிகவும் துணிச்சலாக தனது எதிர்ப்புகளை பதிவிட்டார் பாடகி சின்மயி. ஆனால், சில அரசியல் நோக்கம் உடையவர்கள், தொடர்ந்து, பாடகி சின்மயி பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்ற பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இந்த பொய்யை பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக ஆக்கினர். அவ்வாறே தான் ஒரு பச்சை பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளது நக்கீரனின் சினி கூத்து. அது மட்டுமில்லாமல், ஒரு பெண் என்றும் கூட பாராமல், பாடகி சின்மயியை பார்ட்டி என்று மிகவும் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளது.

நக்கீரனின் சினி கூத்து என்ற ஆபாச பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட இந்த செய்தியை மிகவும் மன வேதனையுடன் பகிர்ந்துள்ளார் பாடகி சின்மயி. நக்கீரன் கோபால் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக பதிவிட்டுள்ளார்? வைரமுத்துவின் நெருங்கிய நண்பராக நக்கீரன் கோபால் இருந்தால், அவருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும் அல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு, வைரமுத்து மீது, தான் புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரிடம் பாடகி சின்மயி புகார் அளித்ததையும், தேசிய மகளிர் ஆணையம் காவல்துறையை இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தியதன் நகளையும் பகிர்ந்துள்ளார்.


அரசியல், திரைத்துறை மற்றும் ஊடகத்துறைகளில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் ஒருவரின் பாலியல் குற்றங்களை தனி ஒரு பெண்ணாக, வீரத்தமிழச்சியாக பாடகி சின்மயி எதிர்கொள்வது இந்த நூற்றாண்டின் வீரச்செயலாகத் தான் பார்க்க வேண்டும்.

ஆனால், இவரை தமிழகம் எப்படி நடத்துகிறது என்பதை அவரே பதிவிட்டுள்ளார். “இத்தன நாள்ல airport லெருந்து வீடு வரைக்கும் என்ன துரத்தி
இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா, இப்ப ஏன்டி சொல்றன்னு பாப்பார நாயேன்னு கேக்க முடிஞ்ச சில நபர்களுக்கு திரு வைரமுத்து அவர்களை ஒரு கேள்வி கூட கேக்க முடியல. அது யேனோ?? 🙂
ஆக, சில பேர் support இருந்தா இன்னா வேணா பண்ணலாம்”, என்று பதிவிட்டுள்ளார்.

நக்கீரனின் சினி கூத்து செய்துள்ள அசிங்கத்தை பார்த்தால், ஆபாச கிசுகிசுக்களையும், ஆபாச புகைப்படங்களையும் வெளியிடுவதற்காகவே ஒரு பத்திரிக்கையா என்ற கேள்வி தான் சாதரணமாக எழுகிறது. வைரமுத்துவின் காம வெறியாட்டங்களை வெளிக்கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக பாடகி சின்மயியை ஆபசமாக சித்தரித்த நக்கீரன் கோபால், ஊடகத்துறையின் ஒரு ஆபாச கூத்து.

Tags
Show More
Back to top button
Close
Close