அரசியல்செய்திகள்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள்!!

புதுடில்லி: இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், முதல்முறையாக அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

லோக்சபா தேர்தல் ஏப்., 11 ல் துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களில் முன்னிலை நிலவரம் தெரிய வரும்.
இந்நிலையில், இந்திய தேர்தல் முடிவுகள் ,அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள உட்பரி தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்நாட்டு நேரப்படி மே 22 இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான நுழைவு கட்டணம் 10 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close