தமிழ் நாடு

இப்ப வீரமணிய வாய் திறக்க சொல்லுங்க பார்க்கலாம் – மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டி தமிழக காங்கிரஸ் சார்பில் மஹா சண்டி யாகம்..!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று பிரார்த்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு மஹா சண்டி யாகம் நடத்தப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கல இசையுடன் மஹா சண்டி யாகம் தொடங்குகிறது. தொடர்ந்து விநாயகர் பூஜை, கோ பூஜை, மகாகணபதி, மகாலட்சுமி, நவக்கிரகஹோமங்களுடன் காலை 9 மணிவரை மகா சண்டி யாகம் நடைபெறும்.

நாளை 22-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு துர்கா கணபதி பூஜை, சங்கல்பம், மூல மந்திர ஹோமம், வேத பாராயணம், 64 யோகினி பலி பூஜை என இரவு 9 மணி வரை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன.

மூன்றாம் நாளான 23-ம் தேதிவியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மங்கல வாத்தியம், விநாயகர் பூஜை, ஜெயதுர்கா ஹோமம், பூர்ணாஹுதி சமர்ப்பணம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை காலை 6 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள்எம்எல்ஏவுமான டி.யசோதா தலைமையில் சென்னை மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.சாய்லட்சுமி, சுசீலா கோபாலகிருஷ்ணன், சரஸ்வதி நாலடியார் உள்ளிட்டோர் யாகத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

மஹா சண்டி யாகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக டி.யசோதா தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் மழை பெய்ய இந்து சமய அறநிலையத்துறை யாகம் நடத்த சொன்னதிற்கு, வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார் திராவிட கழக தலைவர் வீரமணி. இன்றைக்கு அவர் ஆதரவு அளித்து வரும், திமுக கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு பூஜை செய்கிறது. இதனை எல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தை கூட வீரமணி வாயில் இருந்து வராத என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close