செய்திகள்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை மர்ம நபர் உதைத்ததின் பின்னணி…உதைத்தவர் பரபரப்பு வாக்குமுலம்!!

பிரிடேட்டர், டெர்மினேட்டர், உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு உலகம் முழுவது ரசிகர்கள் இருக்கிறார்கள். கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அர்னால்டு ‘ஜர்னி டூ சைனா ‘ மற்றும் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தென்னாபிரிக்காவில் நடந்த அர்னால்டு கிளாசிக் ஆப்ரிக்க என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். அங்குள்ள நிர்வாகிகளுடன் விளையாட்டு தொடர்பாக அவர் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீர்ரென்று மர்ம நபர் ஒருவர் வேகமாக பாய்ந்து வந்து அர்னால்டு முதுகில் தனது இரண்டு கால்களாலும் எட்டி உதைத்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத அர்னால்டு நிலைகுலைந்தார்.அவரது பாதுகாவலர்களும் அதிர்ச்சியானார்கள்.

அர்னால்டு முதுகில் மிதித்தவரை உடனடியாக மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது அர்னால்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.அர்னால்டு முதுகில் உதைக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அர்னால்டை அடித்தால் 1 லட்சம் பணம் தருவதாக தனது நண்பர்கள் தன்னிடம் பந்தயம் கட்டினார்கள், அதனால் தான் உதைத்தேன் என்று உதைத்தவர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close