அரசியல்செய்திகள்

காரணமே இல்லாமல் பேசுவதற்கு…கமல் என்ன முட்டாளா? வணிக ரீதியான ஒரு திட்டமாம் ! ரூ.100 கோடி அதுல கிட்டுமாம் !!

39  தொகுதிகளிலும் 18 சட்டமன்ற மினி தேர்தல்களிலும் இல்லாத அளவு சர்ச்சையாக கமல் பேச என்ன காரணம்?  காரணமே இல்லாமல் பேசுவதற்கு கமல் என்ன முட்டாளா?  வலுவான காரணம் இருக்கிறது.. 

கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் கமல் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் வாங்க வாய்ப்பே இல்லை மேலும் மிக குறைந்த அளவு 2 அல்லது 3 சதவிகித வாக்குகள் தான் கிடைக்கும் என்பதோடு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிறது என்பதே நிலைமை.. 

 சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். கமல் பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொள்ள சுமார் 100 கோடி வரை கேட்டுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸ் முதல் 2 சீசன் டிஆர்பி கமல் இல்லையென்றால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்க வாய்ப்பே இல்லை. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலை விடுவிக்கவும் மனம் இல்லை. அதே நேரத்தில் அவர் கேட்ட 100 கோடிக்கு அவர் தகுதியானவரா ஒர்த்தா  என்பதை பிக் பாஸ் கார்ப்பரேட் டீம் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, 

அவர்கள் கமலிடம் சொன்னது இது தான்.. தேர்தல் முடிவுகள் வந்த பின்பே தான் நம்ம நிகழ்ச்சியும் தொடங்கும். நிச்சயம் டெபாசிட் போன பின்னாடி உங்களை ஒரு ஹீரோ ரேஞ்சில் பார்ப்பதை விட அரசியல் உலகில் நீங்கள் கேலி பொருளாக இருப்பீர்கள். அது நம்ம நிகழ்ச்சிக்கு நிச்சயம் பின்னடைவை தரும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் பேசும் பொருளாக இருக்க வேண்டும் என்ற கார்ப்பரேட்டின் கட்டளைக்கிணங்க கமல் ஆரம்பித்தது தான் சர்ச்சை பேச்சு.. அவர் காங்கிரஸ் பற்றியோ அதிமுக பற்றியோ திமுக பற்றியோ பேசுவதை விட இந்து என்ற மதத்தை வைத்து பேசினால் இன்றைய பாஜக அதை இந்திய அளவில் சர்ச்சை ஆக்கும் என்பதை தெளிவாக அறிந்து தெரிந்தே அந்த சர்ச்சை பேச்சை பேசினார்.. 

தற்போது இந்திய அளவில் கமல் ட்ரெண்டிங்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதிகார பூர்வ ப்ரோமோ விஜய் டீவியில் தற்போது ஒளிபரப்பப்படுகிறது. 

அனைத்துமே கார்ப்பரேட் கட்டளையின் படி கமல் நாடகத்தை நடத்தி ஒத்திகை பார்த்து 100 கோடி சம்பளத்தையும் பெறுவதற்கான ஒப்பந்தத்தையும் கையெழுத்து போட்டுவிட்டார். 

இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் என்ன பேச போகிறார் என்ற ஆவல் நிகழ்ச்சிக்கான டிஆர்பி எகிறும் வழி.. 

 இதில் ஏமாந்து போனது கமலின் ரசிகர்களும் அவரை நம்பி போன வேட்பாளர்களும் தான்..இவ்வாறு நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் காரணங்களை பகிர்ந்து வருகின்றனர்.  

Tags
Show More
Back to top button
Close
Close