செய்திகள்

மஹாத்மா காந்தி ஒரு ஹிந்து தீவிரவாதி : ஹிந்து மத வெறுப்பு பிரச்சாரத்தில் தொல்.திருமாவளவன்

இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறப்புரை என்ற பெயரில் ஹிந்து மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.


அப்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசுகையில், “இந்து வெறியர் பா.ஜ.க-வின் சனாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும்.


காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி”, என்று அவர் பேசினார்.


கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, ஆதவன் உள்பட ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

தேர்தலிலன் போது, சிதம்பரம் கோவிலுக்கு சென்று திருநீறு இட்டுக்கொண்டு, வாக்கு சேகரித்த அவர் தற்போது ஹிந்து மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது அவரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close