இந்தியா

பா.ஜ.க வெற்றி பெறும் என்ற அறிவிப்பால் புதிய உச்சம் பெற்ற இந்திய பங்குசந்தைகள்..!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று முடிவுகள் வெளியானதால் பங்கு சந்தை திடீரென உச்சம் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 467.78 புள்ளிகள் அதிகரித்து 37,930.77 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 128.25 புள்ளிகள் முன்னேறி 11,407.15 புள்ளிகளாக இருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை நோக்கி நாடே காத்திருக்கிறது. இறுதிக் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மாலை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே பெரும்பாண்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் ஊக்கமளிப்பதாக இருந்தது. எனவே ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை சந்தைகள் பொருட்படுத்தவில்லை. இறுதியாக இன்று காலை நிலவரப்படி 783 புள்ளிகள் அதிகரித்து மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் குறியீடு 38,714 புள்ளிகளாக உச்சம் பெற்றுள்ளது. அதே போல தேசிய பங்குச்சந்தை நிப்டி 241 புள்ளிகள் அதிகரித்து 11,648 புள்ளிகளாக உச்சம் பெற்றுள்ளது.

பாஜக ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் வெளியான உடனேயே இந்திய பங்கு சந்தை உச்சம் கண்டுள்ளது, பாஜகவின் பொருளாதார செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. பாஜக ஆட்சி அமைத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், முதலீடுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் கருதியதாலேயே திடீர் ஏற்றம் கண்டுள்ளது இந்திய பங்கு சந்தைகள்.


Tags
Show More
Back to top button
Close
Close