இந்தியா

மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு : அரியணை ஏறும் தேசிய கட்சி எது..? ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல் வெளியானது..!

நேற்றுடன் மக்களவை தேர்தல் திருவிழா ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான முன்னணி ஊடககங்கள் தேர்தலுக்கு பிந்தைய தங்களது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் பிரபல ஊடகமான ஸ்வர்னா செய்தி நிறுவனமும் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மத்தியில் கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவே, மீண்டும் அரியணை ஏறும் என பெரும்பான்மையான ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்வர்னா நியூஸ் சேனல் நடத்திய தேர்தலுக்கு பிந்தயை கருத்து கணிப்பின்படி, தேசியளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்கள் முதல் அதிகபட்சமாக 315 இடங்களில் வெற்றி வாகை சூட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, தேசிய அளவில் குறைந்தபட்சம் 122 தொகுதிகளையும், அதிகபட்சமாக 125 தொகுதிகள் வரையும் கைப்பற்றும் என ஸ்வர்னா நியூஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் அல்லாத இதர கட்சிகள், சுமார் 102 தொகுதிகளை கைப்பற்றும் என ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.ஒன்றிரண்டு எக்ஸிட் போல் முடிவுகள் தவிர, பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதாவே ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close