அரசியல்செய்திகள்

கருத்துக் கணிப்பு: டெல்லி குறித்த செய்தி இனிப்பு ! தமிழகத்தில் மட்டும் திணிப்பு!! இதுதான் எடப்பாடியார் கருத்து!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தைப் பொறுத்தவரை கருத்து திணிப்புகள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தல் பற்றிய கணிப்புகள் பொய் என நிரூபணமானது போலத்தான் இப்போதும் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 39 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளை வெளிப்படுத்தியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவை கருத்து திணிப்புகள் என முதலமைச்சர் பதிலளித்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழகத்தைப் பற்றி மட்டுமே தான் கூறுவதாக அவர் விளக்கமளித்தார்

Tags
Show More
Back to top button
Close
Close