அரசியல்செய்திகள்

ராகுல்காந்தி பிரதமர் ஆகலைனாலும் பரவாயில்லை…மோடியை மீண்டும் பிரதமராக வரவிடமாட்டோம்…சோனியாகாந்தி சூளுரை!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன. இதனால் மிரண்டுபோயுள்ள எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றனர்.

2019 மக்களவை தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்று தேசிய எதிர்க்கட்சிகளும், மாநில கட்சிகளும் புது புது வியூகங்களை கையாண்டு, கூட்டணிகளை அமைத்து கடினமாக போராடியது. ஆனால் தேர்தலுக்கு முந்தய கருத்துக்கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, பாஜக கூட்டணிகளே தனிப்பெரும்பான்மையுடன் முந்துகிறது.

இதனால் தேசிய எதிர்க்கட்சியும்,மாநில கட்சிகளும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். ராகுல் பிரதமர் ஆகலைனாலும் பரவாயில்லை, ஆனால் மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது, அதாவது மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை விட்டுத்தரும் என்று கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியது. நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் இதே யுக்தியை தான் கையாண்டது.

Tags
Show More
Back to top button
Close
Close