செய்திகள்தமிழ் நாடு

தமிழகத்தில் தலை தூக்கும் தீவிரவாதம்? கீழக்கரையில் உட்பட பத்து இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) அதிரடி சோதனை!

தமிழகத்தில் சென்னை, கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், ‘மரணம் எங்கள் இலக்கு,’ என்றொரு ‘வாட்ஸ் ஆப்’ குழு ஒன்றைத் தொடங்கி, பல்வேறு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இந்த குழுவை சேர்ந்த சிலரை போலீசார் கண்காணித்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., கூடுதல் விசாரணை நடத்தியது. இக்குழுவினர்க்கு தமிழகத்தில் தேசவிரோத, பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த அதிகாரிகள், 10 இடங்களில் இன்று (மே 20), அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, கீழக்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள் அங்கிருந்த எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். மேலும் தீவிர விசாரணை நடக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close